Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

“சீன்” திரைப்படம் மலையாள சினிமாவுக்கான சின்ன காதல் கடிதம் - சூர்யா

“சீன்” திரைப்படம் மலையாள சினிமாவுக்கான சின்ன காதல் கடிதம் - சூர்யா

நடிகர் டொவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாளத் திரையுலகக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சீன்’. தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 6-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் ‘ஆவேசம்’, ‘ரோமன்சம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கிய ஜித்து மாதவன், இதன் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இதில் சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். நஸ்ரியா, நஸ்லன், லால், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். மலையாள நடிகர் டொவினோ தாமஸ், ‘விக்டர்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். வெளியான எட்டு நாட்களிலேயே ‘சீன்’ திரைப்படம் ரூ.211 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
படத்தைத் திரையரங்குகளில் காண ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தில் நடித்த டொவினோ தாமஸுக்கும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள டொவினோ, எங்களின் விக்டராகப் படத்தில் இணைந்ததற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. மிகுந்த அன்புடனும் தாராள மனதுடனும் நீங்கள் இந்தப் படத்தில் பங்கேற்றது எனக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளிக்கிறது. அதேபோல், ‘சீன்’ படத்தில் எங்களுடன் பணியாற்றிய மலையாளத் திரையுலகின் சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படைப்புக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மலையாள சினிமா மீதான எங்களது சிறிய அன்பு மடலாக இந்தப் படத்தைப் பார்க்கிறோம்” என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு