Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

மதுபாட்டிலில் குப்பை: “இதை குடித்து உயிரிழக்க வேண்டுமா?” - மதுபிரியர்கள் புகார்

மதுபாட்டிலில் குப்பை: “இதை குடித்து உயிரிழக்க வேண்டுமா?” - மதுபிரியர்கள் புகார்

நாமக்கல் மாவட்டம் அத்தனூர் அருகே உள்ள மதுக்கடையில் வாங்கிய மதுபாட்டிலில் தூசி மற்றும் குப்பைகள் இருந்ததாக மதுபிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நேற்று இரவு மதுபானம் வாங்குவதற்காக 2 பேர் அங்குள்ள கடைக்கு சென்றுள்ளனர். ரூ.300 செலுத்தி 2 மதுபாட்டில்களை வாங்கிய அவர்கள், அதில் ஒரு பாட்டிலில் இருந்த மதுவை இருவரும் குடித்துள்ளனர். இதையடுத்து மற்றொரு பாட்டிலை திறந்து குடிக்க முயன்றபோது, அதற்குள் தூசி மற்றும் குப்பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
பின்னர், குப்பைகள் இருந்த மதுபாட்டிலுடன் செய்தியாளர்கள் முன்னிலையில் அவர்கள் தங்களது புகாரை தெரிவித்தனர். “காசு கொடுத்து மதுவை வாங்குகிறோம். அதில் குப்பைகள் இருந்தால் அதை குடித்து நாங்கள் உயிரிழக்க வேண்டுமா? இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்” என்று மதுபிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு