மதுபாட்டிலில் குப்பை: “இதை குடித்து உயிரிழக்க வேண்டுமா?” - மதுபிரியர்கள் புகார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுபாட்டிலில் குப்பை: “இதை குடித்து உயிரிழக்க வேண்டுமா?” - மதுபிரியர்கள் புகார்

மதுபாட்டிலில் குப்பை: “இதை குடித்து உயிரிழக்க வேண்டுமா?” - மதுபிரியர்கள் புகார்

நாமக்கல் மாவட்டம் அத்தனூர் அருகே உள்ள மதுக்கடையில் வாங்கிய மதுபாட்டிலில் தூசி மற்றும் குப்பைகள் இருந்ததாக மதுபிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நேற்று இரவு மதுபானம் வாங்குவதற்காக 2 பேர் அங்குள்ள கடைக்கு சென்றுள்ளனர். ரூ.300 செலுத்தி 2 மதுபாட்டில்களை வாங்கிய அவர்கள், அதில் ஒரு பாட்டிலில் இருந்த மதுவை இருவரும் குடித்துள்ளனர். இதையடுத்து மற்றொரு பாட்டிலை திறந்து குடிக்க முயன்றபோது, அதற்குள் தூசி மற்றும் குப்பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், குப்பைகள் இருந்த மதுபாட்டிலுடன் செய்தியாளர்கள் முன்னிலையில் அவர்கள் தங்களது புகாரை தெரிவித்தனர். “காசு கொடுத்து மதுவை வாங்குகிறோம். அதில் குப்பைகள் இருந்தால் அதை குடித்து நாங்கள் உயிரிழக்க வேண்டுமா? இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்” என்று மதுபிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.