மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 20 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதேபோல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியிலும் வருகிற 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கடந்த 9-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.