Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 07 செப்டம்பர் 2026 | 22 ஆவணி பராபவ வருடம்

போதைப்பொருள் வழக்கு: எகிப்தில் டி.வி. பெண் தொகுப்பாளருக்கு மரண தண்டனை

போதைப்பொருள் வழக்கு: எகிப்தில் டி.வி. பெண் தொகுப்பாளருக்கு மரண தண்டனை

எகிப்தை சேர்ந்த சாரா கலீபாவுக்கு வயது 39. பிரபல செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர், முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், மாடலாகவும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை கொண்டு வந்து கொகைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்ததாக எகிப்தில் ஒரு குழுவினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சாரா கலீபாவுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement
அப்போது 750 கிலோ போதைப்பொருட்கள், வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த 2 ஆய்வகங்கள் மற்றும் உரிமம் பெறாத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சாரா கலீபா உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சாரா கலீபா உள்பட 12 பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு