Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

பொதுவிநியோக திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

பொதுவிநியோக திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பொதுவிநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் 22.09.2026 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட துணைப்பதிவாளர்கள் (பொது விநியோகத் திட்டம்), குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கணினி மேலாளர்கள் பங்கேற்றனர். இதில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களைத் தீர்வு செய்தல், புதிய நியாயவிலைக் கடைகளைத் திறத்தல், நியாயவிலைக் கடைகளில் தணிக்கை மேற்கொள்வது, அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றுதல் உள்ளிட்ட பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Advertisement
மேலும், சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் அறிவித்தபடி, நியாயவிலைக் கடைகள் மற்றும் கிடங்குகளில் தணிக்கை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட பொதுவிநியோகத் திட்ட கைப்பேசி ஆய்வு செயலி 22.09.2026 அன்று அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அஜய் யாதவ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஜி.லதா, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுவிநியோகத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு