பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று (15.09.2026) நடைபெற்ற நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார். ரா ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பெயர் மாற்றத்தில் அண்ணாவின் பங்கு பேரறிஞர் அண்ணா, காஞ்சிபுரத்தில் நடராஜர் - பங்காரு அம்மாள் தம்பதியருக்கு 15.09.1909 அன்று மகனாகப் பிறந்தார். எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அவர், சிறந்த மாணவர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி மற்றும் தலைவராக உயர்ந்தார். தனது எழுத்தாலும் பேச்சாலும் மக்களிடையே அறிவு சார்ந்த சிந்தனையை வளர்த்த அண்ணா, “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கையை வலியுறுத்தினார். எதிர்க்கருத்து கொண்டவர்களையும் மதிக்கும் பண்பை மக்களிடம் வளர்த்த தலைவராகவும் அவர் போற்றப்படுகிறார்.