பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று (15.09.2026) நடைபெற்ற நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார். ரா ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பெயர் மாற்றத்தில் அண்ணாவின் பங்கு பேரறிஞர் அண்ணா, காஞ்சிபுரத்தில் நடராஜர் - பங்காரு அம்மாள் தம்பதியருக்கு 15.09.1909 அன்று மகனாகப் பிறந்தார். எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அவர், சிறந்த மாணவர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி மற்றும் தலைவராக உயர்ந்தார். தனது எழுத்தாலும் பேச்சாலும் மக்களிடையே அறிவு சார்ந்த சிந்தனையை வளர்த்த அண்ணா, “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கையை வலியுறுத்தினார். எதிர்க்கருத்து கொண்டவர்களையும் மதிக்கும் பண்பை மக்களிடம் வளர்த்த தலைவராகவும் அவர் போற்றப்படுகிறார். தனது ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். “ஏழையின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்” என்ற கொள்கையுடன் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டார். தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றின் காரணமாக, அப்போது “சென்னை மாகாணம்” என அழைக்கப்பட்ட மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தார். 1967 ஏப்ரல் 14-ஆம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயரை ‘தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்’ என மாற்றினார். தொடர்ந்து 1968-ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, கல்வியில் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்தார். மேலும், தமிழ்நாடு அரசின் முத்திரையில் இடம்பெற்றிருந்த ‘கவர்மெண்ட் ஆப் மெட்ராஸ்’ என்ற ஆங்கில வாசகத்தை நீக்கி, ‘தமிழ்நாடு அரசு’ என மாற்றினார். அரசு முத்திரையில் ‘வாய்மையே வெல்லும்’ என்ற சொல்லையும் இடம்பெறச் செய்தார். எழுத்து, பேச்சு மற்றும் செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பேரறிஞர் அண்ணா, மறைந்த பின்னரும் மக்களின் நினைவில் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.