Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 08 செப்டம்பர் 2026 | 23 ஆவணி பராபவ வருடம்

பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு

பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு

கடந்த சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஜெயக்குமார், 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதற்கிடையே, பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement
இந்த மனு இன்று நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்த தேர்தல் வழக்கில் சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் எதுவும் இல்லை என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். இதனிடையே, தோப்பு வெங்கடாசலம் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு