ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக உறியடி நிகழ்ச்சியும் நடைபெற்றது.உறியடிக்காக வைக்கப்பட்டிருந்த பானையில் தேங்காய், 5 எலுமிச்சைப் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சி முடிந்ததும் பானையில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டன.இதில், புளியங்குடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் ஒரு தேங்காயை ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.
Advertisement
5 எலுமிச்சைப் பழங்கள் ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்துக்கும், மஞ்சள் கயிறு ரூ.70 ஆயிரத்துக்கும், வடக்கயிறு ரூ.65 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. இவ்வாறு உறியடி பானையில் இருந்த பொருட்கள் மூலம் மொத்தம் ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது. இந்த ஏல நிகழ்ச்சியில் புளியங்குடி கிராம மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.