Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

பெண்ணுக்கு மட்டும்தான் கற்பா? ஆண்களுக்கு இல்லையா? – சிபிஎம் எம்.எல்.ஏ. லதா கேள்வி

பெண்ணுக்கு மட்டும்தான் கற்பா? ஆண்களுக்கு இல்லையா? – சிபிஎம் எம்.எல்.ஏ. லதா கேள்வி

தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததாகவும், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது அவர் ‘கற்பு’ என்ற வார்த்தையையும் குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த சிபிஎம் பெண் எம்.எல்.ஏ. லதா, முன்னாள் முதல்-அமைச்சர் தனது உரையில் கற்பு தொடர்பான வார்த்தையை பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற சம்பவங்களை குறிப்பிடும்போது ‘பாலியல் வன்முறை’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.மேலும், “இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தால் பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு பறிபோகிறதா? ஆணுக்கு இல்லையா? இத்தகைய சம்பவங்களில் முதலில் கற்பை இழப்பது ஆண்தான்” என லதா கேள்வி எழுப்பினார்.

Advertisement
எனவே, இனி இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.லதாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை, மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு