2 நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் கேள்வி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.அப்போது பேசிய பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி, பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், தற்போது அது நீட்டிக்கப்பட்டிருப்பதுமகிழ்ச்சிஅளிப்பதாகவும்தெரிவித்தார்.அதேநேரத்தில், கிராமப்புறங்களில் தேவையான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Advertisement
எனவே, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மினி பேருந்து சேவைகளையும் விரிவுபடுத்தி பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.பெண்கள் வேலைக்குச் செல்வதற்கும், சொந்தமாக தொழில் தொடங்குவதற்கும் தடையற்ற மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதி மிகவும் முக்கியமானது என்றும் சவுமியா அன்புமணி கூறினார்.மேலும், உயர்கல்வி பயில விரும்பும் மாணவிகள் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் படிப்பை பாதியில் கைவிடும் நிலை மாற வேண்டும் என்றும், பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது அரசின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.