Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 01 செப்டம்பர் 2026 | 16 ஆவணி பராபவ வருடம்

உஸ்பெகிஸ்தான் இதயங்களில் திருக்குறளை விதைத்த பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி! - நயினார் நாகேந்திரன்

உஸ்பெகிஸ்தான் இதயங்களில் திருக்குறளை விதைத்த பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி! - நயினார் நாகேந்திரன்

உலகம் முழுவதும் தமிழின் பெருமையையும், திருக்குறளின் சிறப்பையும் கொண்டு சேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தாஷ்கண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, திருக்குறள் இன்றைய காலத்திலும் வாழ்க்கையின் பல்வேறு துறைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது என்று குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.ஆன்மிகம், தத்துவம் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கான அறிவுரைகளை உள்ளடக்கிய திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோள், தமிழின் அறிவுச் செல்வத்தை மத்திய ஆசிய நாடுகளுக்கும் கொண்டு செல்லும் முக்கியமான முயற்சி என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.காசி தமிழ்ச் சங்கமம் முதல் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது வரை, தமிழின் பெருமையை உயர்த்தும் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், திருக்குறள் ஏற்கனவே பல்வேறு இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நிலையில், வள்ளுவரின் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை எனக் கூறியுள்ளார்.தமிழக மக்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு