Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

புரட்டாசி பவுர்ணமி: சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி பவுர்ணமி: சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர். ஆயிரக்கணக்கானோர் வனத்துறை நுழைவுவாயில் முன்பு குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்களின் உடமைகள் வனத்துறையினரால் சோதனை செய்யப்பட்டன. அதன்பிறகே அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Advertisement
தொடர்ந்து நடந்த பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பக்தர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு