Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

புயல் எச்சரிக்கை: தூத்துக்குடியில் 2-வது நாளாக கடலுக்கு செல்லாத விசைப்படகு மீனவர்கள்

புயல் எச்சரிக்கை: தூத்துக்குடியில் 2-வது நாளாக கடலுக்கு செல்லாத விசைப்படகு மீனவர்கள்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக இன்று கடலுக்கு செல்லவில்லை. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புதன்கிழமை இரவு அல்லது நாளை வியாழக்கிழமை அதிகாலையில் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement
இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும், அவ்வப்போது அதன் வேகம் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் 2-வது நாளாக கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்திலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு