Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

பிரதமர் இல்லம் அருகே காங்கிரஸ் போராட்டம் நேர்மையற்றது: சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி விமர்சனம்

பிரதமர் இல்லம் அருகே காங்கிரஸ் போராட்டம் நேர்மையற்றது: சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி விமர்சனம்
புதுடெல்லி: பிரதமர் இல்லம் அருகே காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் நேர்மையற்ற நடவடிக்கை என சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி விமர்சனம் தெரிவித்துள்ளார்.'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசாரும், சில போராட்டக்காரர்களும் காயமடைந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இந்த நடவடிக்கை, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலியும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக, ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் இணைந்து போராடியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும், அரசியல்வாதிகள் தற்போது வாங்சுக்கின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், பொதுமக்களை இனி எளிதில் ஏமாற்ற முடியாது என்றும் கூறினார்.
Advertisement
இது விழிப்புணர்வுடன் இருக்கும் இந்தியா; நேர்மையற்ற அணுகுமுறைகளை இளைஞர்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.தங்களது நிலைப்பாட்டில் ஆளும் தரப்போ, எதிர்க்கட்சியோ முக்கியமல்ல என்றும், பாராளுமன்றமே உயர்ந்த ஜனநாயக அமைப்பு என்றும் கீதாஞ்சலி தெரிவித்தார். கல்வி தொடர்பான பிரச்சினையை அடிப்படை விவகாரமாகக் கருதி பாராளுமன்றம் செயல்பட வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும், தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுடன் வருபவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.இந்த இயக்கம் நேர்மையும் தூய்மையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது என்றும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எந்த அரசியல் தலைவருடனும் தொடர்பில்லை என்றும் கீதாஞ்சலி தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு