Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 31 ஜூலை 2026 | 15 ஆடி பராபவ வருடம்

பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி மறைவு; தென்னிந்திய இசையுலகில் சோகம்

பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி மறைவு; தென்னிந்திய இசையுலகில் சோகம்
தென்னிந்திய திரையிசை உலகில் தனித்துவமான குரலால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்த மூத்த பின்னணிப் பாடகி ஜமுனா ராணி காலமானார். அவருக்கு 88 வயது. பெங்களூருவில் நேற்று உயிரிழந்த அவரது மறைவு, தென்னிந்திய இசை மற்றும் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் கல்லஹள்ளி பகுதியில் நடைபெற உள்ளது.1938-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த ஜமுனா ராணி, தனது ஏழாவது வயதிலேயே 'தியாகய்யா' திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி இசைத்துறையில் தனக்கென சிறப்பான இடத்தைப் பெற்றார்.தமிழ் திரையுலகில் 1952-ஆம் ஆண்டு வெளியான 'கல்யாணி' திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், 'காளை வயசு கட்டான சைசு', 'பாட்டொன்று கேட்டேன்', 'சின்னச் சின்ன சிட்டு', 'காவேரி தாயே', 'யாரடி நீ மோகினி', 'குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே', 'மாமா மாமா' உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களைப் பாடி ரசிகர்களின் இதயங்களில் நிலையான இடத்தைப் பிடித்தவர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு