Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 16 செப்டம்பர் 2026 | 31 ஆவணி பராபவ வருடம்

பயணிகள் கவனத்திற்கு: மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி; தென் மாவட்ட ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

பயணிகள் கவனத்திற்கு: மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி; தென் மாவட்ட ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களில் இயக்கப்படும் சில முக்கிய ரெயில்கள் குறிப்பிட்ட நாட்களில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், சில ரெயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரெயில் (எண்: 16848): ஆகஸ்ட் 1, 2, 3, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய நிலையங்களில் நிற்காது. இந்த ரெயில் மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி.எம். விரைவு ரெயில் (எண்: 16352): ஆகஸ்ட் 2 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொடைரோடு, திண்டுக்கல் ரெயில் நிலையங்களை தவிர்த்து, மதுரை - மானாமதுரை - சிவகங்கை - காரைக்குடி - புதுக்கோட்டை வழித்தடத்தில் திருச்சி சென்றடையும். கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரெயில் (எண்: 12666): கொடைரோடு மற்றும் திண்டுக்கல் நிலையங்களை தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.

Advertisement
குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (எண்: 16128): ஆகஸ்ட் 1, 2, 3, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய நிலையங்களில் நிற்காது. இந்த ரெயில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.கன்னியாகுமரி - ஐதராபாத் விரைவு ரெயில் (எண்: 17070): ஆகஸ்ட் 7-ம் தேதி கொடைரோடு மற்றும் திண்டுக்கல் நிலையங்களை தவிர்த்து, மதுரை வழியாக மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழித்தடத்தில் திருச்சிக்கு இயக்கப்படும். பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரெயில் (எண்: 16844): ஆகஸ்ட் 1, 4, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் முதல் புகளூர் வரை மட்டுமே இயக்கப்படும். புகளூர் முதல் திருச்சி வரையிலான சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரெயில் பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு