Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 05 அக்டோபர் 2026 | 19 புரட்டாசி பராபவ வருடம்

பணி நிரந்தரம் கோரி சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னையில் பணி நிரந்தரம், வேலை பாதுகாப்பு, நிலுவைத் தொகை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழகம் முழுவதும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி. நர்சிங் படித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அவர்கள், தரையில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுந்தரி, மாநில செயலாளர் ஜெயசூர்யா, பொருளாளர் சூர்யா ஆகியோர் தலைமை வகித்தனர். இதுகுறித்து மாநிலத் தலைவர் சுந்தரி கூறுகையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 4,848 நலவாழ்வு மையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

Advertisement
கர்ப்ப கால பராமரிப்பு மற்றும் பிரசவ சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நலன், குடும்ப நலம், கருத்தடை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், எதிர்காலத்தில் நலவாழ்வு மையங்கள் மூலம் தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ள நிலையில், இடைநிலை சுகாதாரப் பணியாளர்களின் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும் சுந்தரி தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு