Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 05 அக்டோபர் 2026 | 19 புரட்டாசி பராபவ வருடம்

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: முன்னேற்பாடுகள் தீவிரம்

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: முன்னேற்பாடுகள் தீவிரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற 10-ம் தேதி காளி பூஜையும், இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதையடுத்து 11-ம் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். திருக்காப்பு அணிந்து பல்வேறு வேடங்களில் பக்தர்கள் ஊர் ஊராகச் சென்று காணிக்கை சேகரிக்க புறப்படுவர். வேடமணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், பல்வேறு கிராமங்களிலும் கோவில் கடற்கரை வளாகத்திலும் குடில்கள் அமைத்து தங்கி வழிபடுவார்கள். வருகிற 20-ம் தேதி 10-ம் தசரா விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் வேடமணிந்து விரதம் மேற்கொண்டு வரும் பக்தர்கள் தாங்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்துவர். நள்ளிரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை வளாகத்தில் மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறும். இந்த நிகழ்வில் வெளிநாடுகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். மறுநாள் 21-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளியதும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பு எழுந்தருளும் அம்மனுக்கு சாந்த அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, கோவில் கலையரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். மாலையில் அம்மன் கோவிலுக்கு திரும்பியதும் கொடி இறக்கம் மற்றும் காப்பு களைதல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Advertisement
நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவில் வளாகம், கடற்கரை மற்றும் புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. தற்காலிக மற்றும் நிரந்தர சுகாதார வளாகங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. போக்குவரத்து வசதிக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குலசேகரன்பட்டினம் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவில் அருகே திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் வாகனங்களுக்காக தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுகிறது. தீதத்தாபுரம் சாலை அருகே நாகர்கோவில் மார்க்க வாகனங்களுக்கும், கொட்டங்காடு சாலையில் உடன்குடி, திசையன்விளை, வள்ளியூர் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கும் தனித்தனியாக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும், 250 ஏக்கர் பரப்பளவில் 3 இடங்களில் இருசக்கர வாகன நிறுத்தங்களும், 19 இடங்களில் நான்கு சக்கர வாகன நிறுத்தங்களும் அமைக்கப்படுகின்றன. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கூடுதல் வரிசைப்பாதையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, புறக்காவல் நிலையத்தில் இருந்தபடியே கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ஹெலி கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு