Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

நேபாள வெள்ளம்: 9 நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்பு

நேபாள வெள்ளம்: 9 நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்பு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த 2 தொழிலாளர்கள், 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பனிப்பாறை சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் நேபாளத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. திரிசூலி 3ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதைக்குள் வெள்ளத்துடன் அடித்துவரப்பட்ட சேறு மற்றும் இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கினரஇதையடுத்து நேபாள ராணுவத்தினரும் மீட்புப் பணிக்குழுவினரும் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுரங்கத்தின் உள்ளிருந்து சிலரது குரல்கள் கேட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன. சுரங்கத்திற்குள் சுமார் 170 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த மெக்கானிக்கல் போர்மேன் சஞ்சய் ஷா மற்றும் மேற்பார்வையாளர் கபீர் மகர்ஜன் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.சுரங்கத்திற்குள் காற்றோட்ட வசதி இருந்ததால், உணவு மற்றும் குடிநீர் இல்லாமலேயே அவர்கள் 9 நாட்கள் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மீட்கப்பட்ட இருவரும் தற்போது காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், நேபாளத்தில் செயல்பட்டு வரும் 12 நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 500-க்கும் அதிகமானோர் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுரங்கங்களில் சிக்கியிருக்கக்கூடிய மற்ற தொழிலாளர்களையும் மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன மீட்பு உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு