Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

நேபாள வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 1,290 ஆக உயர்வு

நேபாள வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 1,290 ஆக உயர்வு

திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து உருவான கடும் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,290 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட இந்த பேரழிவில் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கினர். தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின்போது பலரது உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.இந்த இயற்கைப் பேரிடரில் இந்தியர்கள் 275 பேர் உள்பட 4,700-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவத்தினர், சர்வதேச பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்ட 21,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தொடர்ந்துதேடுதல்பணிகள்நடைபெற்றுவருகின்றன.இதற்கிடையே, வெள்ளத்தால் மோசமாக சேதமடைந்த நீர்மின் நிலையத்தின் சுரங்கப் பாதையில் கடந்த 9 நாட்களாக சிக்கியிருந்த 2 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) உயிருடன் மீட்கப்பட்டனர்.

Advertisement
இந்த மீட்பு சம்பவம், தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் குழுவினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.முக்கிய நதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, 10-வது நாளாக இன்றும் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், இந்தியா சார்பில் டி.என்.ஏ. தடயவியல் பரிசோதனைக் கருவிகள், அவசரகால மருத்துவப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் இந்திய விமானப்படையின் சி-130ஜே சிறப்பு விமானங்கள் மூலம் நேபாளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக, மீட்பு நடவடிக்கைகளிலும் இறுதிச்சடங்குகளை மேற்கொள்வதிலும் தாமதம் நீடித்து வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு