Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 18 செப்டம்பர் 2026 | 2 புரட்டாசி பராபவ வருடம்

நீலகிரி: கஞ்சா சாக்லேட் விற்க முயன்ற வடமாநில வாலிபர் கைது

நீலகிரி: கஞ்சா சாக்லேட் விற்க முயன்ற வடமாநில வாலிபர் கைது

நீலகிரி மாவட்டம் ஊட்டி பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வடமாநில இளைஞரிடம் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஊட்டி பஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த அந்த இளைஞர், அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்தார். இதனால் ஊட்டி மேற்கு போலீசார் அவரது பையை சோதனை செய்தனர். அதில் சாக்லேட்டுகள் இருந்ததைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement
விசாரணையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சர்பராஸ் அன்சாரி (27) என்பதும், கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், அவரது பையில் இருந்த சாக்லேட்டுகளில் கஞ்சா கலந்திருந்ததும், அவற்றை விற்பனை செய்ய முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சர்பராஸ் அன்சாரியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு