Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

நிலக்கோட்டையில் நகைக்கடையில் 41 பவுன் தங்கம் திருடிய ஊழியர் கைது

நிலக்கோட்டையில் நகைக்கடையில் 41 பவுன் தங்கம் திருடிய ஊழியர் கைது

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள மாலினிக்கு சொந்தமான ‘மதுரா’ நகைக்கடையில் கொம்புகாரன்பட்டியைச் சேர்ந்த பாரதிராஜாவின் மகன் பிரபு (34) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடையில் இருந்து பிரபு சிறிது சிறிதாக மொத்தம் 41 பவுன் தங்க நகைகளை திருடியதாக, கடை உரிமையாளர் மாலினி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி, நிலக்கோட்டை டி.எஸ்.பி.

Advertisement
இளஞ்செழியன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், நகை திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 41 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் பிரபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு