நிலக்கோட்டையில் நகைக்கடையில் 41 பவுன் தங்கம் திருடிய ஊழியர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நிலக்கோட்டையில் நகைக்கடையில் 41 பவுன் தங்கம் திருடிய ஊழியர் கைது

நிலக்கோட்டையில் நகைக்கடையில் 41 பவுன் தங்கம் திருடிய ஊழியர் கைது

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள மாலினிக்கு சொந்தமான ‘மதுரா’ நகைக்கடையில் கொம்புகாரன்பட்டியைச் சேர்ந்த பாரதிராஜாவின் மகன் பிரபு (34) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடையில் இருந்து பிரபு சிறிது சிறிதாக மொத்தம் 41 பவுன் தங்க நகைகளை திருடியதாக, கடை உரிமையாளர் மாலினி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி, நிலக்கோட்டை டி.எஸ்.பி. இளஞ்செழியன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், நகை திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 41 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் பிரபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.