Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்

மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்

இந்திய டி20 அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ், நடப்பு சீசனில் நடைபெற உள்ள சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் மும்பை அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில், சூர்யகுமார் யாதவ் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது தலைமையில் மும்பை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரிலும், விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடரிலும் கேப்டன் பொறுப்பை சூர்யகுமார் ஏற்றால், அவரது சர்வதேச அனுபவம் மும்பை அணிக்குப் பெரும் பலமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால், இந்த இரு தொடர்களுக்கான மும்பை அணியின் கேப்டன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,385
🥈 Silver ₹210.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு