மதுரையில் தொடரும் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணாமல், தன் மீது பழி சுமத்தப்படுவதாக முன்னாள் தி.மு.க. அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழக அரசியல் வரலாற்றில் மிக மோசமான மின்சாரத்துறை அமைச்சராக நிர்மல் குமார் இருப்பதாக விமர்சித்தார். மதுரையில் நிலவும் மின்வெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல், அந்த பிரச்சினைக்குத் தன்னை காரணமாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும், ஐந்து கட்சிகளில் இருந்த ஒருவருக்கு மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார். இது தவெக அரசின் நிர்வாகத் தோல்வியை காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.