நிர்மல் குமார் தான் மிகமோசமான மின்சாரத்துறை அமைச்சர் - பிடிஆர் விமர்சனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நிர்மல் குமார் தான் மிகமோசமான மின்சாரத்துறை அமைச்சர் - பிடிஆர் விமர்சனம்

நிர்மல் குமார் தான் மிகமோசமான மின்சாரத்துறை அமைச்சர் - பிடிஆர் விமர்சனம்

மதுரையில் தொடரும் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணாமல், தன் மீது பழி சுமத்தப்படுவதாக முன்னாள் தி.மு.க. அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழக அரசியல் வரலாற்றில் மிக மோசமான மின்சாரத்துறை அமைச்சராக நிர்மல் குமார் இருப்பதாக விமர்சித்தார். மதுரையில் நிலவும் மின்வெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல், அந்த பிரச்சினைக்குத் தன்னை காரணமாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஐந்து கட்சிகளில் இருந்த ஒருவருக்கு மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார். இது தவெக அரசின் நிர்வாகத் தோல்வியை காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.