நிர்மலா சீதாராமன் பிறந்தநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பிறந்தநாளையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிர்மலா சீதாராமனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், நிதி நிர்வாகத்தை சிறப்பாக செயல்படுத்துவதிலும் அவர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருவதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.மேலும், நிர்மலா சீதாராமன் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.