Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 07 செப்டம்பர் 2026 | 22 ஆவணி பராபவ வருடம்

தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். பணியால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சகோதரர்கள்

தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். பணியால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சகோதரர்கள்

அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மனோஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் (55). சிறு வயதிலேயே போலியோ பாதிப்பால் மாற்றுத்திறனாளியான அவரை, சிகிச்சைக்காக 35 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் செயல்பட்டு வந்த போலியோ சிகிச்சை மையத்தில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். சீதாராமை மையத்தில் சேர்த்த ஒரு மாதத்துக்குப் பிறகு குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, அவர் ஏற்கனவே அங்கிருந்து சென்றுவிட்டது தெரியவந்தது. அதன் பின்னர் பல ஆண்டுகளாக குடும்பத்தினர் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், பஞ்சாபின் அமிர்தசரசில் அரசு வேலை கிடைத்த சீதாராம், அங்கேயே தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில், பஞ்சாப் மற்றும் அரியானாவில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) அண்மையில் நடைபெற்றன. இதற்காக தனது கல்விச் சான்றிதழ் தேவைப்பட்டதால், சீதாராம் மனோஹர்பூரில் தான் படித்த பள்ளிக்குச் சென்றார்.அப்போது அங்கு பணியில் இருந்த உதவி வாக்காளர் பதிவு அதிகாரி ரமேஷ் குமாரிடம், தனது மூத்த சகோதரர் பல்பீர் மனோஹர்பூரில் வசித்து வருவதாக சீதாராம் தெரிவித்தார்.

Advertisement
இதையடுத்து, ரமேஷ் குமார் இது குறித்து அந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர் கிருஷன் குமாரிடம் கேட்டறிந்தார். பல்பீரை ஏற்கனவே அறிந்திருந்த கிருஷன் குமார், சீதாராம் பள்ளிக்கு வந்திருக்கும் தகவலை அவரிடம் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது தம்பி பள்ளிக்கு வந்திருப்பதை அறிந்த பல்பீர், உடனடியாக அங்கு சென்றார். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தம்பியை நேரில் பார்த்த பல்பீர், உணர்ச்சிவசப்பட்டு சீதாராமை கட்டித்தழுவினார். நீண்ட காலமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த சீதாராம், எஸ்.ஐ.ஆர். பணியின் மூலம் மீண்டும் தனது குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு