Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

தென் ஆப்பிரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள குவாமகுதா (KwaMakhutha) நகரில், நேற்று இரவு ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத சிலர் திடீரென வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement
மேலும், 3 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து, அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு