தென் ஆப்பிரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தென் ஆப்பிரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள குவாமகுதா (KwaMakhutha) நகரில், நேற்று இரவு ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத சிலர் திடீரென வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து, அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.