Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

தூத்துக்குடி: கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்ட 3 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி: கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்ட 3 வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் ஆயுதங்களைக் காட்டி வீடியோக்கள் வெளியிடுவதைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கையில் அரிவாளுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாகவும், இதன் மூலம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வீடியோவில் இடம்பெற்றிருந்தவர்கள் மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் மகன் முகிலன் (19), தெற்கு சங்கரபேரியைச் சேர்ந்த முத்துதுரையின் மகன் பெரியசாமி என்ற விக்கி (19), குறிஞ்சிநகரைச் சேர்ந்த சுடர் வடிவேலனின் மகன் சதீஷ்குமார் (19) என்பது உறுதியானது.

Advertisement
இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்று சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும் என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு