Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

தீபாவளி பண்டிகையையொட்டி பொம்மிடி ஆட்டுச்சந்தையில் ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி பொம்மிடி ஆட்டுச்சந்தையில் ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.1.25 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளன. தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ஊராட்சிக்கு உட்பட்ட வடசந்தையூரில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று நடைபெற்ற சந்தையில் ஆடுகளின் விற்பனை களைகட்டியது. மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கம்பைநல்லூர், கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் வியாபாரிகளும் 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

Advertisement
அவற்றை வாங்குவதற்காக பொதுமக்களும் வியாபாரிகளும் அதிகளவில் சந்தையில் திரண்டனர். சந்தையில் 10 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும், ஆட்டுக்குட்டிகள் ரூ.3,500 முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. ஆடுகளின் விலை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை இருந்தது. கடந்த வாரம் நடைபெற்ற சந்தையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையான நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் ரூ.1.25 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு