Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.400 கோடி வரை முறைகேடாகப் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த மாதம் 26-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டு விசாரணை நிறைவடைந்தது.

Advertisement
இதனைத் தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இதற்கிடையே, அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவலை நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது முந்தைய நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி வாயிலாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரது காவலை மேலும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு