Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்து – மக்கள் அச்சம்

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்து – மக்கள் அச்சம்

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் அதிகாலையில் மின்சார பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததுடன், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த மக்களையும் பாதுகாப்பாக மீட்டனர். எண்ணூர் சுனாமி குடியிருப்பின் 5-வது பிளாக்கில் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மின்சார பெட்டியில் திடீரென தீப்பற்றியது. இதைக் கவனித்த அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக குடியிருப்புவாசிகளுக்கு தகவல் அளித்தனர். மின்சார பெட்டியில் இருந்து தீ பரவியதையும், கரும்புகை வெளியேறுவதையும் கண்ட பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.

Advertisement
சிலர் படிக்கட்டுகள் வழியாக கீழே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எண்ணூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர். தீயணைப்புப் படையினரின் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு