Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

குதிரை பேர புகார்: அதிமுக நிர்வாகி மன்னன் கைது – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

குதிரை பேர புகார்: அதிமுக நிர்வாகி மன்னன் கைது – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான மன்னன் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும், தவெக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், தங்களது கூட்டணியில் இடம்பெற்ற அமமுக சட்டமன்ற உறுப்பினரைக் கடத்திச் சென்று கையெழுத்து பெற்றதாகவும் தவெக மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும், இதுதொடர்பாக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் விமர்சித்துள்ளார். இந்த விவகாரங்கள் குறித்து பதிலளிக்க முடியாத அரசு, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மூலமாக ஒரு கதையை உருவாக்கி, அதிமுக நிர்வாகி மன்னனைக் கைது செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், முதலமைச்சரை நேரடியாகச் சந்திக்க முடியாமல் பல அதிகார மையங்களுக்கு இடையில் தவெக ஆட்சி சிக்கியுள்ளதாகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களே அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல், இத்தகைய நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றத்தைச் சுமத்தும் முயற்சியாகவே இந்த கைது நடவடிக்கை இருப்பதாக விமர்சித்துள்ள அவர், இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளின் உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். இறுதியாக, மன்னனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், தரமற்ற அரசியல் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு