Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

திருவண்ணாமலையில் புரட்டாசி பவுர்ணமி: விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலையில் புரட்டாசி பவுர்ணமி: விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் அண்ணாமலை மலையை சிவபெருமானாக கருதி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதனால் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் அமைந்துள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்த நிலையில், புரட்டாசி மாத பவுர்ணமி நேற்று இரவு 11.06 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவு 7 மணிக்கு பிறகு திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்தது. கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ், ரெயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வந்தனர்.

Advertisement
இரவு நேரத்தில் ஏராளமானோர் கிரிவலம் சென்ற நிலையில், அவர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலம் இன்று (சனிக்கிழமை) இரவு 10.44 மணி வரை நடைபெறுவதால், பக்தர்கள் இன்று காலை வரையிலும் விடிய விடிய கிரிவலம் சென்றனர். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில் போலீசார் தொடர்ந்து ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு