திருவண்ணாமலையில் புரட்டாசி பவுர்ணமி: விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருவண்ணாமலையில் புரட்டாசி பவுர்ணமி: விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலையில் புரட்டாசி பவுர்ணமி: விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் அண்ணாமலை மலையை சிவபெருமானாக கருதி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதனால் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் அமைந்துள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்த நிலையில், புரட்டாசி மாத பவுர்ணமி நேற்று இரவு 11.06 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவு 7 மணிக்கு பிறகு திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்தது. கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ், ரெயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வந்தனர். இரவு நேரத்தில் ஏராளமானோர் கிரிவலம் சென்ற நிலையில், அவர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலம் இன்று (சனிக்கிழமை) இரவு 10.44 மணி வரை நடைபெறுவதால், பக்தர்கள் இன்று காலை வரையிலும் விடிய விடிய கிரிவலம் சென்றனர். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில் போலீசார் தொடர்ந்து ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.