திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று 79 ஆயிரத்து 215 பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர். மேலும், 36 ஆயிரத்து 740 பேர் தலைமுடி காணிக்கையை செலுத்தினர்.அன்று கோவில் உண்டியலில் ரூ.4 கோடியே 45 லட்சம் காணிக்கையாக கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Advertisement
இதேபோல், ஒரே நாளில் 4 லட்சத்து 45 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய சுமார் 18 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.