Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்: மு.க. ஸ்டாலின்

சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கானோரின் பெயர்களை நீக்கும் நடவடிக்கைக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திலும் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகவும், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சூழல் போர்க்களம் போல் மாறியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், இன்று வெளியான ஆங்கில நாளிதழ் செய்தியில் பல்வேறு ஆதாரங்களுடன் இடம்பெற்றுள்ள தகவல்கள், SIR நடவடிக்கைக்குப் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இன்றியே தனிப்பட்ட முறையில் ரகசியமாக செயல்பட்டதாக அந்தச் செய்தி வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருக்கு, தாங்கள் பணியாற்றும் அமைப்பில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். தங்களது அறிவுக்கு வராமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரு தேர்தல் ஆணையர்களும் 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பு தெரிவித்தபோதும், அவர்களின் ஆட்சேபனைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் மூன்று ஆணையர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்றும், அது சாத்தியமில்லாத சூழலில் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், மூன்று ஆணையர்களில் இருவருக்கே தங்களது அமைப்பில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதனை சாதாரணமான விஷயமாகக் கருத முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
இது இந்திய ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் என்றும், சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் அரசியல் தலையீடு இல்லாமலும் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தின் மீது மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றம் தலையிட்டு தகுதியானவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்ட பிறகும், அந்தப் பெயர்களை சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டதாக இரு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனை யார் செய்தார்கள் என்பது தங்களுக்கே தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் பட்டியலில் சட்டப்படி திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரம் ERO எனப்படும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு இருந்தும், தகுதியான வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்களை அவர்களால் பட்டியலில் சேர்க்க முடியவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கான ERONet இணையதளம் ஒருவரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்ததாக இரு தேர்தல் ஆணையர்களும் கூறியிருப்பது, தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு எந்த அளவுக்கு இருந்திருக்கலாம் என்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதமே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இனியும் அவர் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் தொடரக்கூடாது என்றும், உடனடியாக அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், SIR நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் அனைத்து விவகாரங்களையும் முறையாக விசாரித்து, அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு