Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கவே மேகதாது அணை கட்டப்படுகிறது - டி.கே.சிவக்குமார்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கவே மேகதாது அணை கட்டப்படுகிறது - டி.கே.சிவக்குமார்

தமிழக அரசின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மேகதாது அணைத் திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மேகதாது அணை கட்டப்படும் என்று நான் தெரிவித்ததற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஆனால், இதுபோன்ற விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. கர்நாடக மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு மேகதாது அணை நிச்சயம் அமைக்கப்படும். யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாட்டின் சட்டதிட்டங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

Advertisement
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டியுள்ளது. அந்த நீரைத் தீர்ப்பின்படி வழங்குவதற்கு மேகதாது அணை கட்டுவது அவசியம். தமிழ்நாட்டிற்கான 177 டிஎம்சி தண்ணீரை முறையாக வழங்குவதற்காகவே இந்த அணைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழக அரசு தனது பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் வந்தால், மேகதாது அணைத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நேரில் விளக்கிக் காட்டத் தயாராக இருக்கிறேன் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு