Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்ற மானசா வாரணாசி

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்ற மானசா வாரணாசி
தெலுங்கு திரைப்பட உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக கவனம் பெற்றுள்ள மானசா வாரணாசி, 2020-ஆம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். ஐதராபாத்தைச் சேர்ந்த அவர், தெலுங்கில் வெளியான 'கப்புள் பிரண்ட்லி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார். தனது அழகும் நடிப்புத் திறமையும் காரணமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்.தெலுங்கில் கவனம் ஈர்த்துள்ள மானசா வாரணாசியை தமிழ் சினிமாவிலும் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அவரிடம் இரண்டு புதிய தமிழ் படங்களின் கதைகள் விவரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
அவற்றில் ஒரு கதையில் நடிக்க அவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.தமிழ் சினிமாவில் நடிப்பது குறித்து தனது எதிர்பார்ப்பை பகிர்ந்துள்ள மானசா வாரணாசி, நடிகையாக ரசிகர்களின் மனதில் நிலையான இடம் பெற வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்களின் அங்கீகாரத்தை பெறுவது எளிதான விஷயம் அல்ல என்றும், அதற்காக தொடர்ந்து கடினமாக உழைத்து போராடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு