தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வரும் 7 நாட்களில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று (செப். 23) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. இது இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணிக்குள் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்தது. செப். 24: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். செப். 25: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் இதே நிலை காணப்படலாம். தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். செப். 26: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. செப். 27 முதல் 30 வரை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை நிலவரம் செப். 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். செப். 26 முதல் 28 வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், சற்று உயர வாய்ப்புள்ளது. சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் வானிலை இன்று (செப்.