Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

தமிழக அரசின் ஆதரவுடன் திரைப்படம் மற்றும் மீடியா துறையில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி – முன்பதிவு அவசியம்

தமிழக அரசின் ஆதரவுடன் திரைப்படம் மற்றும் மீடியா துறையில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி – முன்பதிவு அவசியம்
சென்னை: தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் ஆதரவுடன், Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN) மூலம் திரைப்படம் மற்றும் மீடியா துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் www.editn.in என்ற இணையதளம் மூலம் கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் முக்கிய வேலைவாய்ப்பு துறைகள்:

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் ஆவணப்பட தயாரிப்பு விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் கார்ப்பரேட் திரைப்படங்கள் யூடியூப் மற்றும் சமூக வலைதள உள்ளடக்க உருவாக்கம் காவல் மற்றும் ராணுவ கண்காணிப்பு நிகழ்ச்சி ஒளிப்பதிவு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை ரியல் எஸ்டேட் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு தொழில்துறை புகைப்படம் வனவிலங்கு புகைப்படம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அரசு திட்டங்கள் தொடர்பான ஒளிப்பதிவு

தகுதிகள்: ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். வயது: 18 மற்றும் அதற்கு மேற்பட்டோர். குறைந்தபட்ச கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சியின் நன்மைகள்: அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விடுதி வசதி வழங்கப்படும். பதிவு கட்டணம்: ₹6,000 தொடர்புக்கு: Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN) SIDCO Industrial Estate, EDII Office Road, எக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032. தொலைபேசி: 9360221280 / 8668100181 குறிப்பு: பயிற்சியில் சேர விரும்புவோர் விரைவாக முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு