Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 31 ஜூலை 2026 | 15 ஆடி பராபவ வருடம்

’தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது’ - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

’தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது’ - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்
காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான விவகாரம் குறித்து கர்நாடக மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கர்நாடக முதல் மந்திரி டி.கே. சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டுக்கு தற்போதைய சூழலில் தண்ணீர் திறந்துவிட இயலாது என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டுக்காக ஏற்கெனவே திறந்துவிடப்பட்ட நீர் கடலில் கலந்து விட்டது. 177 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டியிருந்த நிலையில், 400 டிஎம்சிக்கும் அதிகமான நீரை கர்நாடகா வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மாநிலத்தில் போதுமான மழை பெய்ததால், தமிழ்நாட்டுக்கு தேவையான அளவில் தண்ணீர் வழங்க முடிந்தது.தற்போது கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
ஆனால், போதிய நீர் இருப்பு இல்லை என்பதை எடுத்துக்கூறியபோதும், அந்த விளக்கத்தை ஆணையம் ஏற்கவில்லை.இத்தகைய கடினமான சூழ்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்ற எங்கள் நிலைப்பாட்டை ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். மேலும், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளோம்.மேகதாது அணை கட்டப்பட்டால் தற்போது வீணாகும் நீரை சேமித்து வைக்க முடியும். அந்தத் திட்டத்தால் கர்நாடகாவை விட தமிழ்நாடே அதிக நன்மை அடையும். கர்நாடகாவுக்கு அதன்மூலம் கிடைக்கும் முக்கிய பயன் மின்சார உற்பத்தி மட்டுமே" என்று டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு