Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் கணிசமாகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்களைப் பரிமாறி மக்கள் பண்டிகையைக் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து, அரசு அனுமதித்த நேரங்களில் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. இதன் எதிரொலியாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக, நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு உயர்ந்துள்ளது. இதில் ராயபுரம் 238 என்ற காற்றுத் தரக்குறியீட்டுடன் முதலிடத்தில் உள்ளது.

Advertisement

மற்ற பகுதிகளின் காற்றுத் தரக்குறியீடு விவரம்: ராயபுரம் – 238, மணலி – 182, கொடுங்கையூர் – 177, பெருங்குடி – 173, அரும்பாக்கம் – 165, வேளச்சேரி – 74

சென்னையின் ஒட்டுமொத்த சராசரி காற்றுத் தரக்குறியீடு 159 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நவம்பர் 6ஆம் தேதி 56 ஆகவும், நவம்பர் 7ஆம் தேதி 74 ஆகவும் மட்டுமே இருந்தது. ஆனால், இந்த ஆண்டு காற்றின் தரம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இருமடங்குக்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டின் காரணமாக சென்னைவாசிகள் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு