தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
09 Nov 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Nov 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் கணிசமாகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்களைப் பரிமாறி மக்கள் பண்டிகையைக் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து, அரசு அனுமதித்த நேரங்களில் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. இதன் எதிரொலியாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக, நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு உயர்ந்துள்ளது. இதில் ராயபுரம் 238 என்ற காற்றுத் தரக்குறியீட்டுடன் முதலிடத்தில் உள்ளது. மற்ற பகுதிகளின் காற்றுத் தரக்குறியீடு விவரம்: ராயபுரம் – 238, மணலி – 182, கொடுங்கையூர் – 177, பெருங்குடி – 173, அரும்பாக்கம் – 165, வேளச்சேரி – 74 சென்னையின் ஒட்டுமொத்த சராசரி காற்றுத் தரக்குறியீடு 159 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நவம்பர் 6ஆம் தேதி 56 ஆகவும், நவம்பர் 7ஆம் தேதி 74 ஆகவும் மட்டுமே இருந்தது. ஆனால், இந்த ஆண்டு காற்றின் தரம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இருமடங்குக்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டின் காரணமாக சென்னைவாசிகள் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.