Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 22 அக்டோபர் 2026 | 5 ஐப்பசி பராபவ வருடம்

தமிழ்நாடு முழுவதும் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை

தமிழ்நாடு முழுவதும் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை

தமிழகம் முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 184 விற்பனை மையங்கள் மூலம் இதுவரை 16 மெட்ரிக் டன் அரிசி விற்பனையாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றியும் நியாயமான விலையிலும் கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 17-ம் தேதி சென்னையில் முதற்கட்டமாக 30 இடங்களில் கிலோ ரூ.30 (பொட்டலத்துடன்) என்ற விலையில் விற்பனை தொடங்கப்பட்டது. தற்போது அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

995 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 574.058 மெட்ரிக் டன் அரிசி 34 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 439.108 மெட்ரிக் டன் அரிசி விற்பனை நிலையங்களைச் சென்றடைந்துள்ளது. அக்டோபர் 21, 2026 நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 34 மாவட்டங்களில் செயல்படும் 184 விற்பனை மையங்கள் வழியாக மொத்தம் 16 மெட்ரிக் டன் சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையில் 1,286 கிலோ விற்பனை சென்னையில் உள்ள 19 விற்பனை மையங்கள் மூலம் இதுவரை 1,286 கிலோ சன்னரக அரிசி விற்பனையாகியுள்ளது. இதில், திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்தின் மாநகராட்சி வணிக வளாக விற்பனை மையத்தில் 298 கிலோவும், கார்த்திகேயன் சாலையில் உள்ள மையத்தில் 178 கிலோவும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பார்க் டவுன் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் விற்பனை மையத்தில் 120 கிலோ அரிசி விற்பனையாகியுள்ளது. சன்னரக அரிசி குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு