Skip to main content
🌤️ —°C
வியாழன் | 20 ஆகஸ்ட் 2026 | 4 ஆவணி பராபவ வருடம்

டாக்ஸிக் படத்திற்காக நயன்தாரா மொட்டை அடித்தாரா? வைரலான புகைப்படத்தின் உண்மை

டாக்ஸிக் படத்திற்காக நயன்தாரா மொட்டை அடித்தாரா? வைரலான புகைப்படத்தின் உண்மை
நடிகை நயன்தாரா மொட்டை தலையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ததாக கூறி சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ‘டாக்ஸிக்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு வேண்டுதல் செய்ததாகவும் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.ஆனால், தற்போது வைரலாகும் இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா திருப்பதி சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது மாற்றம் செய்யப்பட்டு பரப்பப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் அவரது தலைமுடியை மட்டும் நீக்கி, மொட்டை தலையுடன் இருப்பது போன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியுள்ளனர்.இந்தப் புகைப்படம் பலரையும் குழப்பியதற்கு முக்கிய காரணம், நயன்தாராவின் முகம் மற்றும் உடை உள்ளிட்ட மற்ற அம்சங்கள் அசல் புகைப்படத்தைப் போலவே இருப்பதுதான். முதல் பார்வையில் படம் உண்மையானதாக தோன்றினாலும், தலைமுடி இருக்கும் பகுதியை கவனித்தால் அது மாற்றப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.இதனிடையே, ‘டாக்ஸிக்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நயன்தாரா இத்தகைய வேண்டுதலை செய்திருக்கலாம் என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
இதனால், அவரது மொட்டை தலையுடன் இருப்பது போன்ற புகைப்படமும் தொடர்ந்து வைரலாகி வருகிறது.மோகன் தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்’ படத்தில் கியாரா அத்வானி, ஹியுமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் யாஷின் சகோதரி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் வெளியான படத்தின் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், நயன்தாராவின் மொட்டை புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு